Deprecated: Function eregi() is deprecated in /home/ponnar/public_html/wp-blog-header.php on line 7
PON RADHAKRISHNAN | Minister
Strong Empowered Progressive

12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி

12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த மாணாக்கர்கள், ஆசிரியர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும்  எனது  வாழ்த்துகள். வெற்றி பெற்ற மாணவர்கள் மேற்படிப்பில் தங்களுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து அதிலும் வெற்றிபெற்று தங்கள் துறையில் பல சாதனைகளை படைத்து நாட்டுக்கும், வீட்டுக்கும், தங்களது ஊருக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்று அன்னை பராசக்தியை வேண்டுகிறேன்.

 

வெற்றியை தவற விட்ட மாணாக்கர்கள் மனம் கலங்கிட தேவை இல்லை. மீண்டும் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே மாணாக்கர்கள் எந்த வித விபரீத எண்ணமும் இல்லாமல் தொடர்ந்து படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

–          பொன். இராதாகிருஷ்ணன்