Deprecated: Function eregi() is deprecated in /home/ponnar/public_html/wp-blog-header.php on line 7
PON RADHAKRISHNAN | Minister
Strong Empowered Progressive

விவசாய மேம்பாடு

நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை இருகண்கள் என கொண்டு விவசாய மேம்பாட்டுக்காக எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். அவற்றில் சில:

 

ரப்பர் விலை வீழ்ச்சியை சீர் செய்து ரப்பர் விவசாயிகளும் தொழிலாளர்களும் மகிழ்ச்சியடையும் வகையில் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து பேசியதன் விளைவாக கடந்த நிதியாண்டில் 46000 டன் ரப்பர் முதல் முறையாக ஏற்றுமதி செய்ய்யப்பட்டுள்ளது. ஆதனால் இப்போது உள்ளூர் விலை வீழ்ச்சி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரப்பர் போர்டில் குமரி மாவட்டத்திற்கு போதிய பிரதுனிதித்துவம் கிடைக்க பாடுபட்டு வெற்றி கண்டார்கள்.

 

குமரி மாவட்டமும் அதை சார்ந்துள்ள பகுதிகளும் ரப்பர் சாகுபடிக்கு இயற்கையாகவே ஏதுவானதாக அமைந்துள்ளதால் அதை அப்பகுதியில் வாழும் 1,25,000 ரப்பர் சாகுபடி மற்றும் ரப்பர் தொழில் செய்யும் மக்கள் பயன்படுத்திக் கொள்ள சென்பகராமன்புதூரில் ரப்பர் பூங்கா ரூபய் 14.11 கோடி செலவில் நிறுவப்பட ஆவணச் செய்துள்ளார்கள். இதில் மத்திய அரசின் பங்காக ரூபாய் 7.16 கோடியும் மானில அரசு டிட்கோவின் பங்காக ரூபாய் 3.67 கோடியும் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து ரூபய் 3.48 கோடியும் முதலீடு செய்யப்படுகிறது.

 

தக்கலையில் 2003 ஏப்ரல் 2ஆம் தேதி உயர்ரக வாழை சாகுபடி குறித்து அரசு சார விவாதம் மற்றும் கருத்தரங்கிற்கு தன் சொந்த செலவில் உம் பிறர் உதவியுடனும் நடத்தினார்கள். இக்கருத்தரங்கு மூலம் சுமார் 1000 விவசாயிகள் பயன்பெற்றனர். முகாமில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் இலவசமாக 2 மாங்கன்றுகள் 2 நெல்லிக்கன்றுகள் வீதம் ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள 6000 கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. விவசாய தொழில் நுட்பத்தை பெருக்கும் விதமாகவும் தரம் வாய்ந்த விவசாயிகளை உருவாக்கும் விதமாகவும் இந்த முகாம் அமைந்தது.

 

நாகர்கோவிலில் உழவர் சந்தை அமைய ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்து செயல்படுத்தப்பட்டு வர ஆவணச் செய்தார்கள்.

 

குமரி மாவட்டத்தில் ஆறுகள், குளங்கள் மற்றும் கால்வாய்கள் பராமா¢க்கப்படாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து அவைகளை மேம்படுத்த மத்திய அரசின் சம்பூரண கிராமின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 9கோடி நிதி உதவி பெற்றுத்தந்தார்கள். இத்திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 326 குளங்கள் தூர்வாரி சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு இடங்களில் உப்பாக மாறிய நிலத்தடி நீர் குடி நீர் தட்டுப்பாடு மற்றும் வறட்சி பெறுமளவில் நிவாரணம் அடைந்தது. மேலும் இத்திட்டத்தின் கீழ் வேலைக்கு உணவு என்ற அடிப்படையில் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 7 கிலோ அரிசியும் உழைப்பிற்கு பணமும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை மற்றும் பொய்கை அணை ஆகிய அணைகளிலிருந்து குமரி மாவட்டத்திற்கு நீர்ப்பாசனம் செய்யப்பட்டு வரும் சானல்களாகவும் மற்றும் கேரள மானிலத்திலுள்ள நெய்யார் அணையிலிருந்து நீர் கொண்டு வரும் சானல்களும் தூர்வாரி சீரமைக்கப்பட உள்ளன.