Deprecated: Function eregi() is deprecated in /home/ponnar/public_html/wp-blog-header.php on line 7
PON RADHAKRISHNAN | Minister
Strong Empowered Progressive

விளையாட்டு மற்றும் இளைஞர் நலம்

  • இராஜாக்கமங்கலத்தில் ரூபாய் 10கோடி செலவில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் தென்னிந்திய மாநிலங்களுக்கான இந்திய விளையாட்டு ஆணையத்தின் முதல் துணைபயிற்சி மையம் அமைய அவர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு, அதன் பலனாக 2003 பிப்ரவரி 5ஆம் தேதி பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
  • நாகர்கோவில் விளையாட்டரங்கத்தில் நீச்சல்குளம் அமைப்பதற்கான முயற்சியின் பலனாக மத்திய அரசினால் நாகர்கோவில் விளையாட்டரங்கத்தில் ரூபாய் 66 லட்சம் செலவில் நீச்சல்குளம் 2003 ஜனவரியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் விளையாட்டுத்துறையின் பங்காக ரூ.25 லட்சம் பெற்றுத் தந்ததோடு தன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் தந்து சிறுவர்களுக்கும் ஒரு நீச்சல்குளம் அமைத்துள்ளார்.
  • விளையாட்டில் மேலும் ஊக்கம் அளிக்க மத்திய அரசின் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு கடந்த மூன்றாண்டு காலமாக ரூ.2000 மதிப்புள்ள விளையாட்டு கருவிகள், காலணிகள், ட்ராக்சூட் ஆகியன இலவசமாக வழங்கப்பட்டன. அவர்களுக்கு மாதம் ரூபாய் 500 வீதம் ஊக்கத்தொகையும் ரூ.2000 போக்குவரத்து செலவும் வழங்கப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் நாகர்கோவிலில் சுமார் 24 முதல் 36 விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு வருடமும் உதவி பெற்றுத்தந்தார்கள்.
  • 2001 மே மாதத்தில் குமரி மாவட்டத்தில் நான்கு பள்ளிகளில் புதிய விளையாட்டு மையங்கள் அமைக்க ரூபாய் 6 லட்சம் ஒதுக்கீடு மத்திய அரசிடமிருந்து வாங்கி தந்தார்கள்.இம்மையங்கள் மார்த்தாண்டம் அரசு மேல்நிலைபள்ளியிலும், ராஜாக்கமங்கலம் அரசு மேல்நிலைபள்ளியிலும், கடையல் அரசுமேல்நிலைபள்ளியிலும், ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைபள்ளியிலும் அமைக்கப்பட்டன.
  • தேசிய புனர்நிர்மாணப் படை கடந்த இரண்டு ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வெற்றிகரமாக மத்திய இளைஞர்நலம் மற்றும் விளையாட்டுத்துறையின் உதவியோடு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தின் 100 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.
  • மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுவுடன் அத்துறையில் இயங்கி வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சிறப்பு விருப்ப விளையாட்டு பயிற்சி மையத்தை நாகர்கோவிலில் 2001ம் ஆண்டு ஜனவரி மாதம் 220ம் நாள் நாகர்கோவிலில் தொடங்கி வைத்தார்கள். அந்த பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ள விளையாட்டு வீரர்கள் தங்க விடுதி வசதியுடன் கூடிய அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறார்.

கீழ்கண்ட பணிளுக்கான முயற்சி மேற்கோண்டு வருகிறார்கள்

  • ரூபாய் 1 கோடி செலவில் நாகர்கோவிலில் விளையாட்டு வீரர்களுக்கென விடுதி அமைப்பது.
  • மத்திய விளையாட்டுத்துறை மூலம் ரூபாய் 2 கோடி செலவில் நாகர்கோவிலில் மத்திய அரசின் இளைஞர் விடுதி தொடங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இடத்தேர்வு நடந்து வருகிறது.
  • தக்கலை மற்றும் மார்த்தாண்டத்தில் விளையாட்டுத் திடல் நிறுவுவது.