Deprecated: Function eregi() is deprecated in /home/ponnar/public_html/wp-blog-header.php on line 7
PON RADHAKRISHNAN | Minister
Strong Empowered Progressive

விமானம் விமானநிலையம் வந்தடைந்த தகவலை ஒலிபரப்பும் மரபை கடைபிக்க கேட்டுக்கொண்டார்

மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை அமைச்சர் மாண்புமிகு பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் அலுவலக பத்திரிக்கை செய்தி
இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் மற்றும் விமானத்தின் உள்ளேயும் அந்தந்த மாநில மொழிகளிலும்;, ஆங்கிலத்திலும் பயணிகளை வரவேற்பதற்காகவும்,  விமானம் விமானநிலையம் வந்தடைந்த தகவலைத் தெரிவிப்பதற்காகவும் அந்தந்த விமான நிலையங்களின் பெயர்களை ஒலிபரப்புவது மரபு. ஆனால் சென்னை காமராஜர் மற்றும் அண்ணா விமான நிலையங்களில் ஒலிபரப்புவது இல்லை என மத்திய அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது.
இந்த தகவல் அறிந்தவுடன் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை அமைச்சர் மாண்புமிகு பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் மாண்புமிகு விமானத்துறை அமைச்சர் திரு.அசோக் கஜபதி ராஜு அவர்களை தொடர்பு கொண்டு தமிழகத்தில் உள்ள காமராஜர் மற்றும் அண்ணா விமான நிலையங்களில் பயணிகளை வரவேற்பதற்காகவும், விமானம் விமானத்தில் வந்தடைந்த விபரத்தை தெரியப்படுத்தவும் அந்தந்த விமானநிலையங்;களின் பெயரை ஒலிபரப்பக் கேட்டுக்கொண்டுள்ளார்.