Deprecated: Function eregi() is deprecated in /home/ponnar/public_html/wp-blog-header.php on line 7
PON RADHAKRISHNAN | Minister
Strong Empowered Progressive

ரயில் பயண மேம்பாடு

குமரி மாவட்டத்திற்கு புதிய ரயில்கள் விடுவதற்காகவும் மற்றும் குமரி மாவட்டத்தில் ரயில் பயண வசதிகள் சீராகவும் பல முயற்சிகள் எடுத்தார்கள்.கடந்த நான்கு ஆண்டுகளில் 6 புதிய ரயில்களும் பல விரைவு ரயில்கள் குமரி மாவட்டத்தின் ரயில் தளங்களில் நிற்கும் வகையிலும் ஆவன செய்துள்ளார்கள். அவர்களின் முயற்சிகளின் பயனாக-

தென்னிந்தியாவின் பிரபல பக்தி ஸ்தலமான திருப்பதிக்கு நாகர்கோவில் – திருப்பதி ரயில் விடபட்டது.

திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ்ரயில் 2002 ஜூன் 30ஆம் தேதி தொடங்கபட்டது. இந்தரயில் குழித்துறையில் நிரந்தரமாக நின்று செல்லவும் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

கன்னியாகுமரியிலிருந்து இந்தியத் தலைநகரான புதுதில்லிக்கு “திருக்குறள் எக்ஸ்பிரஸ்” ரயில் விடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நெடுநாளைய கோரிக்கையான குமரி – ஹெளரா (கல்கத்தா) ரயில் விடப்பட்டது.

2001 ஜூலை 8 ஆம் தேதி ஹெளராவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவிலுக்கு வாராந்திர விரைவு ரயில் விடப்பட்டது.

ஹைதரபத்திலிருந்து எர்ணாகுளம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸை கன்னியாகுமரி வரை நீட்டிப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிரார்கள்.திரு. பண்டாரதத்தத்ரே. மத்திய ரயில்வே இணைமந்திரி இதுபற்றி நாகர்கோவிலில் 2003 ஜூன் 20 இல் அறிவித்திருக்கிறார்கள்.

ரூபாய் 4 கோடியே 72 லட்சம் செலவில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி பராமரிப்புபிரிவு நிறுவி 2003 மே 20 ஆம்தேதி திறந்து வைக்க வழி செய்தார்கள்.

இரணியல் மற்றும் மார்தாண்டம் ரயில் நிலையத்தில் மும்பை – கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் – சென்னை ரயில்கள் நின்று செல்வதற்கானஏற்பாடுசெய்துள்ளார்கள்.

மார்தாண்டம் ரயில் நிலையத்தில் பயணசீட்டுகள் முன்பதிவு இடஒதுக்கீடு வசதிகள் ஏற்பாடு செய்ய வழி செய்துள்ளார்கள்.

ரயில் பயணிகளின் திருப்தி ஆண்டான இவ்வாண்டில் ரயில் நிலையத்தில் நாகர்கோவில் ப்ளாட்பாரம் விரிவுப்படுத்தி நிழற்குடை அமைக்கவும், கூடுதல் குடிநீர் குளிர்சாதனம், கூலிகளுக்கு ஓய்வறை, கட்டண கழிப்பறை, கூடுதல் பயணச்சீட்டு பதிவு கவுண்டர்கள், தானியங்கி கணிப்பொறி தொலைபேசி எங்கொயரி விடுமுறை தினங்களிலும் பயணச்சீட்டு முன்பதிவு வசதிகள் ஆகியவற்றை அமைக்கவும் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகள் மின்விளக்குகள் ஆகியவற்றை நிறுவி மேம்படுத்தும் திட்டங்களை ரயில் இலாகா உதவியுடன் செயல்படுத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

வாகவிளையிலிருந்து மருதூர்குறிச்சி செல்லும் பாதை நாகர்கோவிலிலிருந்து பார்வதிபுரம் செல்லும் பாதை கட்டையன்விளையிலிருந்து பார்வதிபுரம் அருகிலுள்ள நாமான்குளம் செல்லும் பாதை. பாளையம் முதல் பரம்பை சாலையை இணைக்கும் கொக்கோடு ஆகிய நான்கு ஆள்இல்லா லெவல் கிராசிங்குகளை ஆள் நிறுத்த லெவல் க்ராசிங்குகளாக மாற்றி தந்தார்கள்.

நாகர்கோவிலிருந்து புத்தேரி செல்லும் பாதையில் ரயில் தடத்தின் மேல் மேம்பாலம் அமைக்க அனுமதி பெற்றுதந்தார்கள்.

பார்வதிபுரத்தில்புதிய ரயில்வே ஸ்டேசன்அமைக்க ரயில் இலாகாவிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரியிலிருந்து கன்னியாகுமரிக்கு வேளாங்கண்ணி, நாகூர், ராமேஸ்வரம், திருச்செந்தூர் ஆகிய புண்ணிய ஸ்தலங்கள் வழியாக கடற்கரை ஓரமாக ஓடும் புதிய ரயில் பாதை உருவாக்க மத்திய ரயில் இலாகாவிடம் கோரியுள்ளார்கள்.