Deprecated: Function eregi() is deprecated in /home/ponnar/public_html/wp-blog-header.php on line 7
PON RADHAKRISHNAN | Minister
Strong Empowered Progressive

மீனவர் சமுதாய நல்வாழ்வு

புத்தன் துறை மற்றும் கேசவன் புத்தன் துறை மீனவர்கள் ஊர்களுக்கிடையே கலவரம் நடந்த போது. கலவரத்தை பற்றி கேள்விப்பட்ட உடனேயே இரவு 2 மணிக்கு கலவரம் நடந்த இடத்திற்கு சென்று இடங்களை பார்வையிட்டு. இரவோடு இரவில் காவல் துறையினரையும் இரு சாராரையும் அழைத்து பேசி. சுமார் ஒரு வாரகாலம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதான உடன்படுக்கை அடையச் செய்வித்தார்கள்.

மணவாளக்குறிச்சியில் மீனவ சமுதாயத்தினரும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் இடையே இரவு நேரத்தில் தகறாறு நடந்தது. வீடுகள் எரிந்து கொண்டிருக்கும் போதே சம்பவ இடத்திற்குச் சென்று காவல் துறையினறை முடுக்கிவிட்டு இருசாராரையும் அமைதிப் பேச்சிற்கு இணங்க வைத்து பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கண்டார்கள்.

குளச்சலில் மீனவ சமுதாய மக்களுக்கிடையே நடைபெற்ற கோஷ்டி தடுத்து அமைதி நிலவ வைத்தார்கள்.

கன்னியாகுமரியை சேர்ந்த 15 மீனவர்களும் மற்றும் இதர மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்களும் சவுதிஅரேபியாவில் மீன்பிடிதொழில் செய்து கொண்டிருந்தபோது 1999 பிப்வரி 16 ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டு கப்பற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.எட்டு மாத காலமாக பாகிஸ்தான் சிறையில் வாடிய இம்மீனவர்கள் விடுவிக்கதான் பாராளுமன்ற உறுப்பினர் ஆனவுடன் பிரதமமந்திரியிடம் எடுத்துரைத்து ஆவன செய்தார்கள்.இம்மீனவர்கள் ரோணிமூஸ், லீனஸ், சுவாமிதாஸ், த்தேயூஸ், சகாயபெஸ்லின்ராஜ், ஆன்றனிசகாயராஜ், ஜார்ஜ்டவுன், ஜெரால்டு, ஆரோக்கியம், ராஜ், டைய்குளோஸ், மரியகொன்சாகோ, ஸ்டார்வின், கில்தாஸ், நசரேன், ஆன்றனி, பாவாடை, போஸ்கோ, முகமதுமைதீன் ஆகியவர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு 2000 ஏப்ரல் 24 அன்று தில்லியிலிருந்து தானே அவர்களை விமானம் மற்றும் ரயில் மூலம் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தார்கள்.அவர்களின் விமானச் செலவு அரசு தரப்பில் கொடுக்கப்பட்டது.

2000 நவம்பர் 12 ஆம் தேதி “மிஸ்டர்இந்தியா” என்ற விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற போது மாலத்தீவுக் கடற்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் நான்கு மாதங்கள் வாடிய குமரிமாவட்டம் தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஹெல்வின், ஆன்றனி, சேசய்யன், மெல்டன், சேவியர், ஜாண்போஸ்கோ, லாறன்ஸ் ஆகிய 7 பேரை இந்திய தூதரகத்தின் உதவியுடன் 2001 பிப்ரவரி 27 அன்று மீட்டு, பின்னர் ராஜன் என்பவரையும் பாரதப்பிரதமர் வாஜ்பேயிடம் பேசி 2002 ஏப்ரல் 4 அன்று மீட்டார்கள்.

2001 டிசம்பரில் மீனவ சமுதாயத்தினரின் வருமானத்தை கடுமளவு பாதித்த மத்திய அரசின் 52 வகை மீன்களை பிடிப்பதற்கான தடையை எதிர்த்து சுமார் 100க்கும் அதிகமான மீனவர்கள் போராட டில்லிவந்த போது அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்ததோடு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திருடி.ஆர்பாலுவிடம் மூன்று முறை நம் மீனவர்களை அழைத்து சென்று அத்தடையை நீக்கச் செய்தார்கள்.

கடலரிப்பினால் பாதிக்கப்படும் குமரி மாவட்ட மீனவ மக்களின் கண்ணீரை துடைக்கும் வகையில் கடும் முயற்சி மேற்கொண்டு மார்த்தாண்டம்துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்-துறை, சின்னத்துரை, தூத்தூர், பூத்துறை, கிழக்குஇனையம்புத்தன்துறை, மேற்குஇனையம்புத்தன்-துறை, முள்ளூர்துறை, இராமன்-துறை, புத்தன்-துறை, இனையம்மேல்மிடாலம், கீழ்மிடாலம், மண்டைக்காடுபுதூர், பெரியவிளை, சின்னவிளைதுறை, கடியப்பட்டணம், பள்ளம்துறை, கிழக்குகீழமணக்குடி, சின்னமுட்டம், வட்டக்கோட்டை ஆகிய 22 கிராம கடலோரப் பகுதிகளில் மத்திய அரசின் ஹட்கோ உதவியுடன் கடலரிப்பு தடுப்பு சுவர் கட்ட ரூபாய் 31 கோடியே 81 லட்சம் திட்ட அனுமதி பெற்று வேலை தொடங்கி நடைபெற்றுவருகிறது.

குமரிமாவட்டத்தில் மீன்பிடிப்பதற்கு வசதியாக கடும் முயற்சி மேற்கொண்டு இனையம், கிழக்குகுறும்பனை, வாணியக்குடி, சைமன்-காலனி, பெரியகாடு, கோவளம், ஆரோக்கியப்புரம், அழிக்கால், பிள்ளைதோப்பு ஆகிய பகுதிகளில் தூண்டில் வளைவுகள் அமைக்க மத்தியஅரசின் ஹட்கோ உதவியுடன் ரூபாய் 36 கோடியே 47 லட்சம் செலவிலான திட்டம் அனுமதி பெற்றுத் தந்துள்ளார்கள். விரைவில்பணிதுவங்கவும்முயற்சிமேற்கொண்டுவருகிறார்கள்.

2002 ஜனவரி 2 ஆம்தேதி “நதீசா” என்றபடகில்மீன்பிடிக்கச்சென்றசின்னதுறை, தூத்தூர், மார்த்தாண்டந்துறை, பூத்துறை, இரவிபுத்தன்துறை, புதூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டு மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதில் முதற்கட்டமாக பிராங்கிளின், கிளீட்டஸ், அலியாஸ், வின்சென்ட், பித்தலீஸ், அந்தோணிபிச்சை, கொக்களின்டோ, சூசைநாயகம், ஜாண்நாயகம், எலியாஸ், ராஜேஸ் ஆகிய 10 பேரை 2002 பிப்ரவரி 13 அன்று மீட்டிபின்பு மீதமுள்ள சுனில் என்பவரை பற்றி பாரதப்பிரதமர் வாஜ்பேயிடம் எடுத்துரைத்து அன்னார் மாலத்தீவு சென்றபோது அந்நாட்டு அரசிடம் பேசி அவர்களையும் 2002 அக்டோபர் 1 அன்றுமீட்டார்கள்.

தேங்காய்பட்டினத்தில் மீன் பதனிடும் தொழிற்சாலை அமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டார்கள்

குமரி மீனவர்கள் கேரளாவின் கொல்லத்திற்க்கு மீன் பிடிக்க சென்றபோது அப்பகுதி மீனவர்களுக்கும் நம் பகுதி மீனவர்களுக்கும் ஏற்பட்ட கலவரத்தில் பல படகுகளும் மற்ற பொருட்களும் தீ வைத்து கொளுத்தபட்டன.இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு திரு.சர்ச்சில், திரு.ரசல், திரு.லாரன்ஸ் ஆகிய கன்னியாகுமரியை சேர்ந்த பங்குதந்தையர்களையும், திரு.வின்செண்ட் ஜெயன்,ஆழ்கடல் மீன்பிடி சங்க தலைவர் அவர்களையும் அழைத்து சென்று கேரள முதல்வர்.திரு.ஏ.கே.ஆண்டனியை சந்தித்து பேசி சமரசம் ஏற்பட செய்தார்கள்.

குமரி மாவட்டத்தில் National Institute for Coastal & Marine Diversity மத்திய அரசின் நிதி ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்து 35 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டது