தொலைத்தொடர்பு மின்னணு மற்றும் தபால் துறை மேம்பாடு
குமரி மாவட்டத்தின் 4 நகராட்சிகளும், 56பேரூராட்சிளும், 99கிராம ஊராட்சிகளும், 1992ல் தொலைத்தொடர்பு துறையினரால் நகரப்பகுதிகளாக கணக்கிடப்ப்ட்டு 2 மாத வாடகை ரூபாய் 375ம். இலவச அழைப்பு 150 எனவும், அழைப்பு ஒன்றுக்கு 80 பைசா எனவும் முன்பணம் தொகை ரூபாய் 3 ஆயிரம் எனவும் நிர்ணயித்து வசூலிக்கப்பட்டது. அப்போதைய மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் மாண்புமிகு ராம்விலாஸ் பஸ்வான் அவர்களை சந்தித்து வேண்டியதன் பேரில் குமரி மாவட்டத்தின் 99 நகராட்சி பகுதிகளில் தொலைபேசி கட்டணம் 2 மாத வாடகை ரூபாய் 250ம், இலவச அழைப்பு 250 எனவும், முன்பணம் தொகை ரூபாய 500 எனவும் குறைக்கப்பட்டது. மீதமுள்ள 4 நகராட்சிகளிலும், 56 பேரூராட்சிகளிலும் கிராம ஊராட்சி போல் ஒரே சீராக சலுகை கட்டணம் வசூலிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். மேலும் 2001 மே மாதத்தில் 5 மாத வாடகை வசூலிக்க போவதாக அறிவித்த தொலைத்தொடர்பு துறை 2 மாத வாடகையாக குறைந்ததின் பங்கும் அவர்களையே சேரும்.
வெள்ளிச்சந்தையில் இயங்கி வந்த பகுதி நேர தபால்நிலையம் முழுநேர தபால்நிலையமாக 2003 பிப்ரவரி 5 அன்று மாற்றி அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அந்நிதியாண்டில் திறக்கப்பட்ட ஒரே தபால்நிலையம் வெள்ளிச்சந்தை தபால் நிலையாகும்.
எறும்புக்காடு தபால் நிலையம் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளார்கள்
சின்னத்துறை மற்றும் பூக்கடையில் பஞ்சாயத் சஞ்சார் சேவா கேந்திர திட்டத்தின் கீழ் புதிய தபால் நிலையத்தை 2002 நவம்பர் 8 அன்று தொடங்கி வைக்க ஆவன செய்தார்கள்.
2003 மார்ச் 31 அன்று பேயன்குழியில் புதிய தபால் நிலையம் தொடங்கி வைக்க ஆவண செய்தார்கள்.
தினமும் 4 மணி நேரம் மட்டுமே இயங்கி வந்த மார்த்தாண்டம் தொலைக்காட்சி நிலையத்தை தனது முயற்சியினால் முழுநேரமாக மாற்றி அமைத்தார்கள்
தினமும் 4 மணி நேரம் மட்டுமே செயல்பட்டு வந்த நாகர்கோவில் வானொலி நிலையத்தை தனது முயற்சியினால் முழுநேரமாக மாற்றி அமைத்தார்கள்
குமரி மாவட்டத்தில் தொலைத்தொடர்பு மேலும் சிறக்க பி.எஸ்.என்.எல்-லின் செல்போன் வசதி மாவட்டம் முழுவதிலும் கிடைக்கப்பெற ஆங்காங்கே செல்போன் டவர்கள் அமைக்க தொலைத்தொடர்பு இலாகாவுக்கு பரிந்துரை செய்துள்ளார்கள். இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இது விரைவில் வெற்றியடையும் நிலையில் உள்ளது.