Deprecated: Function eregi() is deprecated in /home/ponnar/public_html/wp-blog-header.php on line 7
PON RADHAKRISHNAN | Minister
Strong Empowered Progressive

சுற்றுலா மேம்பாடு

இந்தியாவின் தென்முனையும் முக்கடலும் சங்கமிக்கும் அழகிய சுற்றுலா தலமுமான கன்னியாகுமரியை சர்வதேச சுற்றுலா மையமாக்க முயற்சி மேற்கொண்டு மாண்புமிகு மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜக்மோகன் அவர்களின் தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகளின் குழுவை கன்னியாகுமரிக்கு வரவழைத்து கீழ்கண்ட ரூபாய் 5 கோடிக்கும் மேலான மத்திய அரசு உதவிக்கு ஏற்பாடு செய்து தந்தார்கள்.

கன்னியாகுமரியின் அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாய் முக்கடலும் சங்கமமாகும் இடத்தில் சூரிய உதயத்தையும்,அஸ்தமனத்தையும் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் கண்டுகளிக்க ரூபாய் 35 லட்சம் செலவில் வியூ டவர் (View Tower) அமைக்க ஏற்பாடு செய்தார்கள். கவனிக்கப்படாமல் இருந்த குமரி மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலமான வட்டக்கோட்டையை ரூபாய் 50 லட்சம் செலவில் சீர் செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

தக்கலை ஒன்றியத்தில் உதயகிரி கோட்டை மற்றும் அதை சார்ந்த பூங்காவையும் ரூபாய் 50 லட்சம் செலவில் அழகுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டார்கள். தெக்குறிச்சி பீச்சை ரூபாய் 50 லட்சம் ஒதுக்கீட்டின் பேரில் அழகுபடுத்த ஆவன செய்துள்ளார்கள்.

 

ஆசியா கண்டத்திலேயே அடையாளம் காணப்பட்ட மாத்தூர் தொட்டில் பாலத்தை அழகுபடுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சங்குத்துறை, தேங்காய்ப்பட்டணம், வள்ளவிளை போன்ற பீச்சுகளை மத்திய அரசின் நிதி உதவியுடன் மேம்பாடு செய்து சுற்றுலா மையங்களாக மாற்றி, அழகுபடுத்தி, மாவட்டத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள்.

நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் நகராட்சி பூங்கா ரூபாய் 42 லட்சம் செலவில் அழகுபடுத்தப்பட்டுள்ளது.இதற்காக தனது பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூபாய் 19 லட்சம் ஒதுக்கினார்கள்.இந்த நவீனபடுத்தப்பட்ட பூங்காவில் பெருந்தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஒலிஒளி கண்காட்சி மற்றும் சிறுவர்களுக்கான கார்டூன் காட்சி காட்ட ஏற்பாடு செய்துள்ளார்கள்.

திற்பரப்பு நீர் வீழ்ச்சி, பத்மனாபபுரம் அரண்மனை, முக்கடல் அணை, மருந்துவாழ்மலை மற்றும் சதறால மலை போன்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த தலங்கள் மக்களை கவரும் வண்ணம் சுற்றுலா மையமாக மாற்ற தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளாவிலும் புகழ் பெற்ற திருத்தலமான மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 8 லட்சம் செலவில்  பக்தர்கள் தங்கும் வசதியுடன் கூடிய கலாச்சார மண்டபமும், பக்தர்கள் இளைப்பாற திறந்த வெளிகூடம் ஆகியன அமைத்து கொடுத்தார்கள்.

கன்னியாகுமரி என்றாலே நினைவுக்கு வரும் விவேகானந்தா பாறை மற்றும் அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் பாதை ஆகியவற்றை ரூபாய் 2 கோடி செலவில் மேம்படுத்த திட்டம் வகுத்துள்ளார்கள்.

கன்னியாகுமரியில் ரூ.35 லட்சம் செலவில் வெளினாட்டினரை கவரும் வண்ணம் தங்குமிடம் அமைக்க ஆவன செய்தார்கள்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தியாகி வேலு தம்பி தளவாயின் தலக்குளம் இல்லத்தை 50 லட்சம் செலவில் நினைவிடமாக மாற்றி மேம்படுத்த ஆவன செய்தார்.