Deprecated: Function eregi() is deprecated in /home/ponnar/public_html/wp-blog-header.php on line 7
PON RADHAKRISHNAN | Minister
Strong Empowered Progressive

சுகாதாரம் மற்றும் சமுதாய மேம்பாடு

பாரதபிரதமர் நிவாரண நிதியிலிருந்து 544 பேருக்கு பரிந்துரை செய்து 319 பேருக்கு இருதய, சிருநீரக, புற்றுநோய் சிகிச்சைக்காக சுமார் 60 லட்சம் ரூபாய் பெற்றுத் தந்தார்கள்.

நாகர்கோவிலில் 2003 மே 17 18ந் தேதிகளில் பெண்களுக்கு தன் சொந்தச் செலவில் இலவச மருத்துவ முகாம் நடத்தினார்கள்.இம்முகாமில் குமரிமாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 1600 பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.தமிழ்நாடு முழுவதும் 25 மருத்துவ நிபுணர்கள் சிகிச்சைஅளித்தனர்.ஸுமார் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த மருந்துகளும் இலவசமாக அளிக்கப்பட்டது. இதில் பல எளிய மக்களுக்கு லேப் பரிசோதனைகளும் இலவசமாக செய்யபட்டது.ஆப்ரேஷன் பற்றிய அறிவுரைகளும் அளிக்கபட்டன.மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜக்மோஹன் இந்த முகாமை ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் இளம் குழந்தைகளிடையே உயிரை அச்சுறுத்தும் கொடிய நோய் மஞ்சள் காமாலை பரவலாக இருப்பதால் ஐந்து முதல் பன்னிரெண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கு இலவச ஹெப்பாடைடிஸ் ‘பி'(hepatitis B) தடுப்பூசி போடும் முகாம் மார்த்தாண்டம், குலசேகரம், ஈத்தாமொழி, குளச்சல்ஆகிய இடங்களில் தனது சொந்த செலவில் நடத்தினார்கள். முதல் கட்டமாக 2003 ஜூன் 28, 29 ஆம் தேதிகளிலும், 2 ஆவது கட்டமாகஆகஸ்ட் 2, 3 ஆம் தேதிகளிலும் இம்முகாம் நடந்தேறியது.சுமார் எட்டாயிரத்திற்கும் மேலான குழந்தைகள் இதில் பயனடைந்தார்கள். மூன்றாவது கட்டம்செப்டம்பர் 6, 7 தேதிகளில் நடந்தன. இத்தகைய தடுப்பூசி முகாம்களில் மேலும் பல குழந்தைகள் பயன் பெற தொடர்ந்து நடத்த ஆவன செய்துள்ளர்கள்.

குமரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியர்களுக்கான 75 சதவிகிதம் மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் இந்திரா கூட்டுக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 2001-2002 மற்றும் 2002-2003 நிதியாண்டுகளில் சுமார் ரு.58.99 கோடி செலவில் 3538 புதிய வீடுகள் கட்டவும் 1768 கச்சா வீடுகள் மேம்படுத்தவும் வழி செய்யப்பட்டது. குமரி மாவட்டத்தின் அனைத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உதவி பெற்று முழுமை அடைந்ததால், அவர்களின் தனி முயற்சியின் பெயரில் மாவட்டத்தின் பிற்படுத்தபட்டோருக்கும் இத்திட்டம் பயன்படும் வகையில் நீட்டிக்கப்பட்டது.

குமரி மாவட்டம் முழு சுகாதாரம் பெற தேசிய சீரமைப்பு படை திட்டத்தின் கீழ் நவம்பர் 2002 வரை 9.167 தனிநபர் கழிப்பறைகள் சுமார் 1 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவிலே முதல் முறையாக குமரி மாவட்டத்தில் தக்கலை,மேல்புறம் ஆகிய இரு யூனியன்கள் முழுசுகாதாரம் பெற்று யூனியங்களாக உருவாகி தேர்வு செய்யப்பட்டு மாநில அரசிடமிருந்து சான்றிதழ் பெற்றுள்ளன.

2001-2002 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் ஜவஹர் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகளுக்காக ரூபாய் 3 கோடி வழி செய்துள்ளார்கள்.இத்தொகை கிராம ஊராட்சிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாகர்கோவில் நகர மேம்பாட்டிற்காக மத்திய அரசின் ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பாட்டிற்கான ஆதரவு திட்டத்தின் (IDSMT) கீழ் வடசேரி பஸ் நிலையத்தை விரிவுப்படுத்தி செப்பனிடுதல். வடசசேரி கனகமூலம் சந்தையில் குளிர்சாதன வசதிகள் அமைத்தல் மற்றும் மீன்சந்தை சீரமைத்தல் ஆகியன ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமாக நாகர்கோவில் நகராட்சி தீட்டி மத்திய நகரவளர்ச்சி துறையிடமிருந்து சுமார் 5 கோடி ரூபாய் மானிய நிதி பெற ஆவன செய்துள்ளார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா ஸ்தலமாக அறிவிக்கப்படும் தருணத்தில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் நகர பகுதிகளில் போக்குவரத்து மற்றும் ஆட்கள் நடமாட்டம் வெகுமளவில் அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு நாகர்கோவில் நகர மேம்பாட்டிற்காக இன்னர் ரிங் ரோடு அமைக்கவும், அனாதைமடம் பகுதியில் பூங்கா அமைக்கவும் சம்மந்தப்பட்ட மாவட்ட நகரசபை அதிகாரிகளை கூடி திட்டம் தீட்ட ஆவன செய்துள்ளார்கள்.

குமரியில் மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு மையம் அமைக்க மத்திய சமூக நிதி வழங்க மந்திரி டாக்டர் எஸ்.ஏன்.ஜட்டியா அவர்களிடம் இடைவிடாது முறையிட்டத்தின் பேரில் 2003 ஆகஸ்ட் 27ஆம்தேதி ஒப்புதல் பெற்று தந்துள்ளார்கள். இம்மையம் விரைவில் ஊனமுற்றோர் நல்வாழ்விற்காக குமரி மாவட்டத்தில் செயல்ப்படுத்த உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை பகுதியில் உள்ள நுள்ளிவிளை கிராம பகுதி பொருளாதாரரீதியாக தாழ்ந்து இருப்பதால் அதை மானில அரசு உதவியோடு மத்திய ஊரக வளர்ச்சி துறையின் மாடல் வில்லேஜ் ஆக தேர்வு செய்யபட்டு 35 லட்சம் செலவில் அக்கிராமத்தின் பொருளாதார மற்றும் சுகாதார நிலைமையை சீர் செய்ய ஆவன செய்தார்கள்.

குமரியில் முதன்முதலாக நாகர்கோவிலில் மின்சார தகனமையம் 65 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க ஏற்பாடு செய்துள்ளார்கள்.