Deprecated: Function eregi() is deprecated in /home/ponnar/public_html/wp-blog-header.php on line 7
PON RADHAKRISHNAN | Minister
Strong Empowered Progressive

கல்வி வளர்ச்சி

குமரிமாவட்ட சரித்திரத்தில் இடம் பெறும் வகையில் “அரசு மருத்துவக் கல்லூரி” அமைவதற்காக தீவிரமாகப் போராடி, அரசு மருத்துவ கல்லூரிக்கு 2001 மார்ச் 12ஆம் தேதி அடிக்கல் நாட்டியதின் மூலம் அம்முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளார்கள். அரசு மருத்துவக் கல்லூரி விரைவில் செயல்பட வேண்டி இக்கல்லூரிக்காக தனது தொகுதியில் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அதன் மூலம் அவசர சிகிச்சை பிரிவும் வெளி நோயாளிகள் பிரிவும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் இக்கல்லூரி பணிக்காக மத்திய அரசின் ஹட்கோ நிறுவனம் ரூபாய் 5 கோடி ஒதுக்கியுள்ளது.

குமரி மாவட்டத்தைச் சார்ந்த ஏராளமான கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.ஈயின் (All India Council for Technical Education) ஒப்புதல் வாங்கி அளித்துள்ளார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்கவை புனித சேவியர்ஸ் பொறியியல் கல்லூரி, சன் பொறியியல் கல்லூரி, ஏ.வி.டி.(A.V.D) தொழில் நுட்ப கல்லூரி மற்றும் நாராயண குரு பொறியியல் கல்லூரி மஞ்சாலு மூடு ஆகியவை ஆகும்.

மத்திய அரசின் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.4.64 கோடி செலவில் குமரி மாவட்டத்தின் அருமனல்லூர் ,வில்லுண்ணிகோணம்,பொன்மனை, வாத்தியார்கோணம்,தேங்காய்பட்டினம், ஆகிய உயர்னிலை பள்ளிகளிலும் ,ஏழுதேசபற்று,ஈச்சன்விளை,கண்டன்விளை பேயன்குழி,கொல்லங்கோடு,ஆளூர் ஆகிய மேல்நிலை பள்ளிகளிலும் கட்டிடங்கள் அமைக்க வழி செய்துள்ளார்கள்.

மத்திய அரசின் சர்வ சிக்ஷா அப்யான் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) திட்டத்தின் குமரி மாவட்டத்தின் பள்ளிகளில் ரூ. 91.85 செலவில் கீழ்கண்ட வளர்ச்சிப்பணிகள் நிறைவு பெற வழி செய்துள்ளார்கள்.

10 அரசு ஆரம்ப பாடசாலைகள்

(மூவேந்தர்நகர், மூலச்சல், வாரியூர்,இராஜாக்கமங்கலம், களியக்காவிளை, மங்கலம், திருவரம்பு, அருமனை, பொன்மனை, பளுகல்)

ரூ. 33.00 லட்சம்
9அரசு நடுநிலைப்பள்ளிகள்

(ஆலங்கோட்டை, புதூர், அம்மாண்டிவிளை, மடிச்சல், தோட்டிக்கோடு, இரணியல், கடமான் குழி, பாரதப்பள்ளி, பிலாவிளை)

ரூ. 28.50 லட்சம்
21 பள்ளிகளில் குடிநீர் வசதிகள் ரூ 3.15 லட்சம்
36 பள்ளிகளில் கழிவறை வசதிகள் ரூ 7.20 லட்சம்
4 இதர அலுவலக கட்டிடங்கள் ரூ 20.00 லட்சம்