Deprecated: Function eregi() is deprecated in /home/ponnar/public_html/wp-blog-header.php on line 7
PON RADHAKRISHNAN | Minister
Strong Empowered Progressive

ஆடிட்டர் திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் துக்ளக் ஆசிரியர் பணி பொறுப்பேற்று நடத்துவது துக்ளக் பத்திரிக்கைக்கு மேலும் வலுசேர்க்கும்

மாண்புமிகு மத்திய நெடுஞ்சாலை, சாலைப்போக்குவரத்து மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கைச் செய்தி

ஆசிரியர் திரு. சோ அவர்கள் துக்ளக் பத்திரிக்கையை உருவாக்கி உயர்த்திய நிலை ஜனநாயகத்தின் உயிர்நாடியை உருவாக்கியதாக அமைந்தது. ஆசிரியர் திரு. சோ அவர்களின் மறைவு ஜனநாயகவாதிகளுக்கும், தேசியவாதிகளுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாக மட்டும் அமையாமல் துக்ளக் பத்திரிக்கையின் எதிர்காலத்தை கேள்விக்குரியதாக்குமோ என்ற அச்சம் எழுந்தது.

இந்த அச்சத்தை போக்கும் வகையில் துக்ளக் பத்திரிக்கையின் பொறுப்பினை திரு. சோ அவர்களின் நீண்டநாள் நண்பர், ஆடிட்டர் திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் ஏற்றிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.

ஆடிட்டர் திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் மிகச் சிறந்த படிப்பாளி, அறிவுஜீவி என்பது மட்டுமல்லாமல் தலைச்சிறந்த கட்டுரையாளர், பேச்சாளர், எழுத்தாளர்  மற்றும் அரசியல் வல்லுநராகவும் விளங்கி வருகிறார். இந்திரா காந்தி அம்மையாரின் அவசரக்கால கொடுமைக்கு எதிராக ஜனநாயகம் காக்க போராடிய போராளிகளில் மிக முக்கியப்பங்கு வகித்தவர். அகில இந்தியாவில் சிதறிக்கிடந்த கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு இயக்கமாக போராடிய மரியாதைக்குரிய திரு.ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களுக்கு உதவியும், ஆலோசனையும் வழங்கி பின்புலமாக இருந்து செயல்பட்டவர். அதன் மூலம் மீண்டும் ஜனநாயகம் தழைக்க திரு. எஸ்.குருமூர்த்தி அவர்கள் போராடினார்கள்.

நமது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்த பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர்ந்த பெருமையும் திரு.எஸ்.குருமூர்த்தி அவர்களைச் சாரும். நமது உள்நாட்டு தயாரிப்புகளை நாம் பயன்படுத்த வேண்டுமென்று கொள்கை உறுதிப்பாட்டோடு செயல்பட்டு வரும் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தில் (ஸ்வேதேசி ஜாக்ரன் மன்ச்) ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறப்பாக வழிகாட்டிய பெருமையும் திரு. எஸ்.குருமூர்த்தி அவர்களைச் சேரும்.

தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சிவகாசி போன்ற பல்வேறு தொழில் நகரங்களின் வளர்ச்சிக்கும், சிறு, குறு தொழில் முனைவோர்கள், உழைப்பாளர்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காகவும் திட்டமிட்டு உழைத்து வருபவர். மேலும் பல்வேறு சாதி அமைப்புகளிடையே காழ்ப்புணர்ச்சி, பொறாமை, போட்டி மறைந்து, அச்சமுதாயங்களுக்கிடையே ஒரு இணக்கமான சூழலை உருவாக்கியதோடு ஒவ்வொரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்து வருபவர் திரு.எஸ். குருமூர்த்தி அவர்களாவார்.

பிரிந்து கிடக்கும்  இந்து சமுதாயத்தின் பல்வேறு அமைப்புகள் வெளியில் தெரியாமல் செய்துவரும் சேவைப் பணிகளையும்,சமுதாயப் பணிகளையும் உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வரும் ஹிந்து ஆன்மீகம் மற்றும்  சேவைக் கண்காட்சி மூலம் புகழ் பரப்பியவர் திரு. எஸ். குருமூர்த்தி ஆவார்.

இது போன்ற பல்வேறு சிறப்பம்சம் நிறைந்த ஆடிட்டர் திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் துக்ளக் ஆசிரியர் பணி பொறுப்பேற்று நடத்துவது துக்ளக் பத்திரிக்கைக்கு மேலும் வலுசேர்க்கும் என்று நம்புகிறேன். அவரது இந்த ஆசியர் பணி சிறக்க எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

– திரு. பொன். இராதாகிருஷ்ணன்